விஜயுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு இணைந்த சஞ்சய் தத்!

விஜயுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு இணைந்த சஞ்சய் தத்!

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி கொண்டு இருக்கும் லியோ படத்திற்கு கோலிவுட் தாண்டி இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு வசூலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ திரைப்படம் தமிழகத்தின் முதல் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணைந்து நடிக்கிறார்; இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நடிகர் விக்ரமும், கமலும் கூட இந்தப் படத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் திட்டமிட்டபடி காஷ்மீர் படபிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க படக்குழுவினர் தீவிரமாக இருப்பதாகவும் தகவல் வருகிறது.

இந்த நிலையில் லியோ படத்தின் காஷ்மீர் ஷெடுயீலில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அவரது வருகையை அறிவிக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளது. அது வைரலாக பரவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *