விளையாட்டு துறை அமைச்சருக்கு விளையாட்டு உபகரணங்கள் பரிசு!
மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சருக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இன்று சென்னையில் நடிகர் மற்றும் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்து விரைவில் வெளி வர உள்ள கண்ணை நம்பாதே படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது.
நெஞ்சுக்கு நீதி, கலக தலைவன் திரைப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் மார்ச் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தை இயக்கிய மாறன் இயக்கி இருக்கிறார். அவருடன் ஆத்மிகா இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறான். திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
உதயநிதி அவர்கள் அமைச்சரான பிறகு கலந்து கொள்ளும் முதல் சினிமா விழா இதுவாகும். இந்த விழாவில் உதயநிதி அவர்களுக்கு பொன்னாடைக்கு பதிலாக அரசு பள்ளி மாணவர்கள் பயனுறும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்க பட்டது. அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர் பேசும்போது, பத்திரிகையாளர்ளுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி அவர்கள் இதை பள்ளி மாணவர்களுக்கு தான் கொண்டு சேர்த்து விடுகிறேன் என்று மகிழ்வுடன் தெரிவித்தார்