ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழா வருடந்தோரும் நடந்து வருகிறது. சிறந்த திரைப்படங்களுக்கான விருது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்து ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படமும்,  ஆசிய திரைப்பட விருதுகளில் சில முக்கிய விருதுகளை வென்றுள்ளது. அந்த விருதுகளிய பெற்று கொள்ள படக்குழு ஹாங்காங் சென்று இருக்கிறார்கள்

மார்ச் 12 ஆம் தேதி ( நாளை ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1)  விருதுகளை பெற்று கொள்ள உள்ளது.

சிறந்த திரைப்படம்,

சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),

சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),

சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்

சிறந்த ஆடை வடிவமைப்பு
(ஏகா லக்கானி) ,

ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

Ponniyin Selvan 1 Movie Review - Movie Reviews Ponniyin Selvan

இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா ,திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத் மற்றும் திரு. ரவி வர்மன் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *