இந்தியன் 2 படப்பிடிப்பில் பரபரப்பு!

இந்தியன் 2 படப்பிடிப்பில் பரபரப்பு!

கல்பாக்கம் அருகே நடைபெற்று வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு குழுவினரிடம் கோயிலுக்கு நன்கொடை கேட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் டச்சுக்காரர்களால் உருவாக்கப்பட்ட கோட்டை அமைந்து இருக்கிறது. இக்கோட்டையை தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறதுது.

நடிகர் கமலஹாசனின் ’இந்தியன் 2’ படிப்பிடிப்பு கடந்த மூன்று தினங்களாக இங்குள்ள கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில், கமலஹாசன் பங்கேற்கும் முக்கிய சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு, கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று மற்ற நடிகர்களை வைத்து ஒரு சில காட்சிகள் இறுதி கட்டமாக எடுக்கப்பட்டது.

இறுதி நாள் படப்பிடிப்பு என்பதால் கிராம மக்கள் சார்பில் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு நன்கொடை வழங்குமாறு படப்பிடிப்பு குழுவினரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கும், கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, டச்சுக்கோட்டை நுழைவு வாயிலை கிராமமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Director Shankar back on the sets of Kamal Haasan's 'Indian 2' | Tamil  Movie News - Times of India

தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார், அங்கு வந்து கிராம மக்களிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால் டச்சு கோட்டை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *