லைகாவின் அடுத்த அதிரடி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது!

லைகாவின் அடுத்த அதிரடி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது!

கோலிவுட்டில் அடுத்தடுத்து பிரமாண்ட படங்களை எடுத்து கொண்டிருக்கும் லைகா புரொடக்‌ஷன் வைகைப்புயல் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது

முன்னதா பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பாக உருவாகி கொண்டிருக்கிறது அதர்வா- ராஜ்கிரண் திரைப்படம்

களவாணி & வாகை சூடவா படங்களை இயக்கிய இயக்குனர் A.சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ராஜ்கிரன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படத்திற்கு பட்டத்து அரசன் என்ற பெயர் வைத்துள்ளனர். ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். லோகநாதன்.S ஒளிப்பதிவில், ராஜா முஹம்மது படத்தொகுப்பு செய்துள்ள பட்டத்து அரசன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.

விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டத்து அரசன் திரைப்படத்தின் அதிரடியான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *