சன்னி லியோன் ஆடை குறித்து நடிகர் சதிஷ் கூறிய கருத்துக்கு அதிகரிக்கும் கண்டனங்கள்
நடிகர் சதிஷ் பேச்சுக்கு அதிகரிக்கும் கண்டனங்கள்
சில நாட்களுக்கு முன்னால் சன்னிலியோன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படமான ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.
நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ், பெண்களின் ஆடை குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சன்னி லியோன், தர்ஷா குப்தா ஆடைகள் குறித்து அவர் கூறிய கருத்து வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து பாடகி சின்மயி டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதோடு நடிகர் மற்றும் இயக்குனர்ன் மூடர் கூட்டம் நவீன் ‘சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சகோதரர் சதிஷ் , உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்.#மாற்றமேகலாச்சாரம்” என்று டிவிட் செய்துள்ளார். சதீஷ் உடைய இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனங்களைதெரிவித்து வருகின்றனர்.