போனி கபூர் வீட்டிற்கு மருமகளாகும் மணிரத்னம் திரைப்பட நாயகி

போனி கபூர் வீட்டிற்கு மருமகளாகும் மணிரத்னம் திரைப்பட நாயகி

பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தைய்ய தைய்யா’ என்ற பாடலில் நடனம் ஆடியதன் மூலம் புகழ் பெற்றவர் நடிகை மலாய்க்கா அரோரா. இவர் கடந்த 1998ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அதே ஆண்டு நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 19 ஆண்டுகள் கடந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றநர். இவர்களுக்கு அர்ஹான் (20) எனும் மகன் இருக்கிறார்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகருமான அர்ஜூன் கபூரும், மலாய்க்கா அரோராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்டது.

தற்போது 49 வயதாகும் நடிகை மலாய்க்கா அரோராவும், அவரை விட 12 வயது இளையவரான நடிகர் அர்ஜூன் கபூரும் காதலித்து வருவது பாலிவுட்டில் விவாத பொருள் ஆகி இருக்கிறது. வயதை கடந்த இவர்களது காதல் பலராலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்களது உறவுமுறை குறித்து குடும்பத்தாருக்கு எடுத்துக்கூறி அவர்களுடைய சம்மதத்தை வாங்க முயற்சி செய்வதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் முன்னதாகப் பங்கேற்ற அர்ஜூன் கபூர் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து இருவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்வார்கள் என இவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்து வந்தனர்.

இந்நிலையில், மலாய்க்கா தன் சமூக வலைத் தள பக்கத்தில் “நான் யெஸ் சொல்லிவிட்டேன்” எனக்கூறிய பதிவு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *