எங்கள் படையாண்ட மாவீரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

எங்கள் படையாண்ட மாவீரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வீரப்படை ஆண்ட வீரா வெற்றிக்குப் பிறந்த தீரா
மக்களுக்காக வாழ்ந்தாயே
மாவீரா

சோழர் வழி வந்த சூரா
சூழ்ச்சி அழிக்கின்ற மாறா
மக்களை மறந்து மறைந்தாயே
மாவீரா

-“கவிப்பேரரசு” வைரமுத்து

மண்ணையும் மானத்தையும் காத்த எங்கள் மாவீரனே!
மனிதராக பிறந்தவர் எவராக இருந்தாலும் “படையாண்ட மாவீரா”வில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதி மெல்லிசை நாயகன்
ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் மெட்டமைத்து இசைத்து சகோதரி சைந்தவி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டால் உயிரை உலுக்கி கண்களில் கொப்பளித்த கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோடி நெகிழ்வோடு நெஞ்சினை நனைக்கும்.

அறம் சுமந்த உனது வாழ்வியலை இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு இச்சமூகம் பேசிப் பேசி உனது புகழ் பாடும்.

எங்கள் படையாண்ட மாவீரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

பேரன்போடு,
வ. கௌதமன்
எஸ்.கிருஷ்ணமூர்த்தி
பி.எஸ்.எஸ்.ராஜா நிர்மல்
இ.குரலமுதன்
யு.எம்.உமாதேவன்
கே.பாஸ்கர்
கு.பரமேஸ்வரி
மற்றும்
விகே புரடக்க்ஷன்ஸ்
தயாரிப்பு குழுமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *