மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின் கனவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிருத்விராஜுக்கு விபத்து!

மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின் கனவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிருத்விராஜுக்கு விபத்து!

மலையால திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிருத்விராஜ் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது விளையாத் புத்தா என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின் கனவு திரைப்படமாகும். ஏற்கனவே சாச்சி இயக்கத்தில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடித்திருந்த பிருத்விராஜ், தற்போது அவரின் கனவு திரைப்படமான விளையாத் புத்தா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விளையாத் புத்தாப் படத்தை ஜெயன் நம்பியார் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மரையூரில் நடைபெற்று வருது. 50 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் நடிகர் பிருத்விராஜும் இருந்தார்.

இந்த நிலையில், 24/06/2023 அன்று வழக்கம்போல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் நடிகர் பிருத்விராஜ்  சண்டையிடுவது போன்ற ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இந்த காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இந்த காட்சியில் டூப் எதுவும் போடாமல் நடிகர் பிருத்விராஜ் ரிஸ்க் எடுத்து நடித்தார்.

Kaduva Movie Location: Jojo Is Not Controversial; Youth Congress Conducts  March To 'Kaduva' Set Starring Prithviraj - Youth Congress Conducts March  To Prithviraj Sukumaran Starrer Kaduva Movie Location At Kanjirappilly »  Jsnewstimes

இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நடிகர் பிருத்விராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலியால் துடித்த நடிகர் பிருத்விராஜை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும் அறுவை சிகிச்சை செய்தால் குறைந்தது 2 மாதங்களாவது ரெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்கள். இதனால் விளையாத் புத்தா படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. நடிகர் பிருத்விராஜ் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகினறனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *