சம்பந்திகளாகப் போகும் ஆக்ஷன் கிங் மற்றும் தம்பி ராமையா! யாரும் எதிர்பார்க்காத ஜோடி!
90களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த அர்ஜூன், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து உள்ளார். இவரது ஆக்ஷன் காட்சிகளை கண்டு தமிழ் சினிமாவின் புரூஸ்லி எனக்கூட ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு மிரட்டுவார். நடிப்பு மட்டுமல்லாது இயக்கம், தயாரிப்பு என பல துறைகளிலும் இவர் சாதனை படைத்துள்ளார். அதேசமயம் சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். இப்படியான அர்ஜூன் தற்போது வில்லன் கேரக்டரில் அசத்தி வருகிறார். அவர் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
அர்ஜூன் மகளான ஐஸ்வர்யா விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் பெரிய அளவில் சோபிக்காத அவர், அதன்பின் சொல்லி விடவா என்னும் படத்தில் நடித்தார். இதன் பின்னர் இதுவரை சினிமாவில் நடிக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை காதல் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல் வெளியானது.
அவர் வேரு யாருமில்லை தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் ‘தம்பி ராமையா’ . இவரது மகன் உமாபதி ராமையா, தமிழில் ஒரு கூடை முத்தம், மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து பிரபலமாகினார்.
இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தான் தொகுத்து வழங்கினார். அப்போது தம்பி ராமையா, அர்ஜூன் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட நட்பு, உமாபதி – ஐஸ்வர்யா இடையே காதல் உண்டாக்கியதாக கூறப்படுது.
விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்