தனுஷின் 50வது படத்தில் இவர்தான் கதாநாயகியா! மீண்டும் ஒரு முறை இணையவுள்ளார்!

தனுஷின் 50வது படத்தில் இவர்தான் கதாநாயகியா! மீண்டும் ஒரு முறை இணையவுள்ளார்!

அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் தனுஷ் அவரின்  50-ஆவது படத்தை, அவரே இயக்கி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்படாத தகவல் ஒன்று உள்ளது. இந்த படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், தனுஷின் D-50 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பார் என கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தனுஷை தவிர விஷ்ணு விஷால் மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இரண்டு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.துஷாரா விஜயன் தனுஷுக்கு தங்கையாகவும், அபர்ணா பாலமுரளி சந்தீப் கிசனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியான நிலையில்,

cinemaraj on Twitter: "#Dhanush and #AmalaPaul in telugu movie #RaghuvarnBtech stills http://t.co/VkRz2I9wkn" / Twitter

தற்போது இந்த படத்தில் அமலா பாலும் இணைந்துள்ளதாக, கூறப்படும் தகவல் தான் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. ஒரு தரப்பினர் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க உள்ளதாக கூறும் நிலையில், மற்றொரு தரப்பினர் அதற்க்கு வாய்ப்பே இல்லை என இந்த தகவலை மறுக்கின்றனர். ஏற்கனவே தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில், இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தனுஷின் ஐம்பதாவது படத்திலும் இது தொடருமா? என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *