ஆர் ஜே பாலாஜி நடிப்பில் “ரன் பேபி ரன்” டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் மார்ச் 10 முதல் !!!

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் “ரன் பேபி ரன்” டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் மார்ச் 10 முதல் !!!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அடுத்த அதிரடி வெளியீடாக ஒரு சீட் எட்ஜ் திரில்லரை ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.

நடிகர்கள் ஆர் ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் ‘ரன் பேபி ரன்’, திரைப்படம் மார்ச் 10, 2023 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில், உருவான இப்படத்தில் இஷா தல்வார், ராதிகா சரத்குமார், ஜோ மல்லூரி, ஹரீஷ் பெராடி, ஸ்ம்ருதி வெங்கட், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, KPY பாலா, ஜார்ஜ் மரியன், நாகிநீடு முதலிய முன்னணி நட்சத்திரங்கள்ன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஒரு புலனாய்வு திரில்லர். சோஃபி என்ற மருத்துவக் கல்லூரி மாணவியின் மரணத்திலிருந்து இக்கதை தொடங்குகிறது. அது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு மருத்துவக் கல்லூரி மாணவி தாரா உயிருக்கு பயந்து தப்பியோடுகிறார். தப்பி ஓடும் வழியில் தாரா, காரின் பின் இருக்கையில் தஞ்சம் அடைகிறாள். அந்தக் காரை வைத்திருக்கும் சத்யா ஆரம்பத்தில் தாராவிற்கு உதவ மறுத்துவிட்டாலும் பின்னர் அவளை அவனது வீட்டில் இரண்டு மணிநேரம் தங்க அனுமதிக்கிறான். தாரா யார், அவள் உயிருக்கு ஏன் ஆபத்து? சத்யாவை தாரா சந்திக்கும் நிகழ்வு, அவனது வாழ்க்கையை எப்படி மாற்றப் போகிறது? அதற்கு என்ன நடக்கிறது என்பதுதான் ‘ரன் பேபி ரன்’.

‘ரன் பேபி ரன்’ படத்திற்கு S யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மண் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Image

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்பாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கை முற்றிலுமாக மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை அனைத்தும் இத்தளத்தில் இருக்கிறது. இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் இது வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *