நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணாள் தாக்கூர், ஷௌர்யுவ், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் #Nani30 திரைப்படம் பிரமாண்டமாக ஆரம்பமானது !!!
நேச்சுரல் ஸ்டார் நானி உடைய 30வது படத்தை அறிமுக இயக்குனர் ஷௌரியவ் இயக்குகிறார். மோகன் செருகுரி (CVM), டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் மூர்த்தி KS ஆகியோர் இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் துவக்க விழா இன்று ஹைதராபாத்தில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது.
முஹூர்த்தம் ஷாட்டை துவங்கும் வகையில், மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்போர்டு அடிக்க, அஷ்வினி தத் கேமராவை சுவிட்ச் ஆன் செய்து துவங்கி வைத்தார். புச்சி பாபு, கிஷோர் திருமலா, ஹனு ராகவபுடி, வசிஸ்தா மற்றும் விவேக் ஆத்ரேயா ஆகியோர் இணைந்து முதல் காட்சியை இயக்கினர். அதற்கு முன், விஜயேந்திர பிரசாத் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் தந்தார். பலாசா கருண் குமார், கிரீஷ் அய்யர், தேவகட்டா, சோட்டா K நாயுடு, சுரேஷ் பாபு, தில் ராஜு, 14 ரீல்ஸ் கோபி- ராம் அச்சந்தா, ஏ.கே.அனில் சுங்கரா, மைத்ரி ரவி, DVV தனய்யா, ஸ்ரவந்தி ரவி கிஷோர், K.S.ராமராவ், சாஹு கரபதி, ஆசியன் சுனில், ஆகியோருடன் தொடக்க விழாவில் அபிஷேக் அகர்வால், நிஹாரிகா கொனிடேலா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
இப்படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கின்றார். திரைத்துறையின் முன்னணி இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் இணைகின்றனர். சானு ஜான் வருகீஸ் ISC ஒளிப்பதிவு செய்ய, பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹிருதயம் புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும், ஜோதிஷ் ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சதீஷ் EVV நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர்
தொழில்நுட்பக் குழு:
இயக்குநர்: ஷௌரியவ்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM), டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் மூர்த்தி KS
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ்
ஒளிப்பதிவு : சானு ஜான் வருகீஸ் ISC இசையமைப்பாளர்: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஜோதிஷ் சங்கர் எடிட்டர்: பிரவீன் ஆண்டனி கிரியேட்டிவ் கிரியேட்டிவ் புரடியூசர் : பானு தீரஜ் ராயுடு எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – EVV சதீஷ் ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (AIM)