லால் சலாம் படத்தில் இருந்து விலகிய தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்த்தை முடித்து கொடுத்த பிறகு, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இல்லே.. அந்த படத்தோட பேட் லக் பத்தி ஒரு சேதி .
படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவலை படக்குழு வெளியிட்டார்கள். இப்படத்திற்கு பூஜை போட்டுள்ள நிலையில் சீக்கிரம் படபிடிப்பு துவங்கும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், லால் சலாம் படத்திலிருந்து திடீரென அப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா வெளியேறிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார்.
லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க, ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் இருந்து ஐஸ்வர்யா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் ஆடை வடிவமைப்பாளர் விலகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிலும் எனது பெயரை அடுத்தடுத்து வரும் போஸ்டர்களில் இருந்து எடுத்துவிடுங்கள் என்றும் கூறி இருக்கிறார். படமே ஆரம்பிக்காத நிலையில், இப்படி ஒரு செய்தி வெளியாகி இருப்பது பெரும் சலசல்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.