இந்த வசதி கூட இல்லையா? – குஷ்பூ

இந்த வசதி கூட இல்லையா? – குஷ்பூ

நடிகை குஷ்பூ இன்று ( ஜனவரி 31 ) வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்று இருந்து இருக்கிறார். அங்கு கால் வலியுடன் இருந்த தனக்கு சர்க்கர நாற்காலி கிடைக்காமல் அவதிப்பட்டதாக மிகவும் வருத்ததுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், ஏர் இந்தியா நிறுவனத்திடம், ”முழங்காலில் காயம் ஏற்பட்ட பயணியை அழைத்து செல்ல தேவைப்படும் சர்க்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை. இதற்காக நான் அரை மணிநேரம் கால் வலியுடன் காத்திருந்தேன். அதன் பின்னர் வேறு ஒரு விமான நிறுவனத்திடம் இருந்து சர்க்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்து சென்றனர்” என குறிப்பிட்டு உள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம், இதற்காக நடிகை குஷ்பூவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதில், “உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் . இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்துச் செல்லப்படும்” என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

ஒரு மிகப்பெரிய நிறுவனம், குஷ்பூ போன்ற அரசியல் மற்றும் சினிமா பின்புலம் இருக்கும் பிரபலத்திற்கே தேவையான வசதிகளை செய்து கொடுக்க தவறுகிறார்கள், இதில் மற்றவர்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன ஆகும் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *