கோயிலுக்குள் செல்ல அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா!

கோயிலுக்குள் செல்ல அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா!

நடிகை அமலாபால் சமீபத்தில் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளார். ஆனால், ‘மதப் பாகுபாடு’ காரணமாக அவரை கோவிலுக்குள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வளாகத்திற்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்களைக் காரணம் காட்டி கோவில் நிர்வாக அதிகாரிகள் தரிசனத்திற்கு அனுமதி மறுத்ததாகவும், அதனால், தான் சாலையில் இருந்து கடவுளை தரிசனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அமலாபால் கூறியிருக்கிறார்.

மேலும், கோயில் பார்வையாளர்கள் பதிவேட்டில் அமலாபால் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “2023-ல் இன்னும் மதப் பாகுபாடு இருப்பது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் கடவுளின் அருகில் செல்ல முடியவில்லை. ஆனால், தூரத்தில் இருந்து கடவுளின் அருளை உணர முடிந்தது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும். மதத்தின் அடிப்படையில் அல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்படுவோம்” என்று எழுதி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *