வரி செலுத்தாத ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய் துறையில் இருந்து நோட்டீஸ்

வரி செலுத்தாத ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய் துறையில் இருந்து நோட்டீஸ்

மகாராஷ்ட்ராவின் நாஷிக் மாவட்டத்தில் அத்வாடி அருகே உள்ளது சின்னர் தாலுகாவிற்கு உட்பட்ட தங்கோன் கிராமம். இந்த கிராமத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் சொந்தமாக சுமார் ஒரு ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலத்தை வாங்கியுள்ளார்.

அதற்கு வரியாக சுமார் ரூபாய் 21 ஆயிரத்து 960 செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், ஐஸ்வர்யா ராய் அந்த வரியை அரசுக்கு முறையாக செலுத்தவில்லை. அப்படி நிலம் வாங்கியதற்கான வரியை செலுத்த பல முறை ஐஸ்வர்யா ராய்க்கு அதுதொடர்பான துறை நினைவூட்டி இருக்கிறார்கள்.

ஆனால், ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை .இந்த நிலையில், சின்னர் தாலுகாவின் தாசில்தார் ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில் இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள் வரிப்பணத்தை முழுவதும் செலுத்தாட்டா மகாராஷ்ட்ரா நில வருவாய் சட்டம் 1996ன் கீழ் ஐஸ்வர்யா ராய் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் கடந்த 9-ந் தேதியே ஐஸ்வர்யாராய்க்கு அனுப்பப்பட்ட நிலையில் இதுவரை ஐஸ்வர்யா ராய் அதற்கு பதில் கொடுக்கவில்லை. இச்சூழலில் இப்போது வரை சில கோடி ரூபாய் சம்பளமாக வாங்கும் ஐஸ்வர்யாராய் சுமார் 22 ஆயிரம் வரியாக செலுத்தாததற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *