சினிமா காதலர்களுக்கு PVR கொடுக்கும் சலுகை!

ஜனவரி 20 ஆம் தேதி ‘சினிமா காதலர்கள் தினத்தை கொண்டாடும் நோக்கத்தில் பிவி ஆர் ஒரு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
எந்த படத்தை வேண்டுமானாலும், ஜனவரி 20 ஆம் தேதி பிவிஆர்-ல் 100 ரூபாய்க்கு பார்க்கலாம் என்பதே அந்த திட்டம். சினிமா காதலர்கள் தினத்தை கொண்டாடும் நோக்கில் PVR இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் பிவிஆர் சினிமாஸில் உள்ள பிரீமியம் இருக்கைகளுக்கு இந்த சலுகை பொருந்தாதது. மேலும் அவற்றுக்கான வழக்கமான விலையை மக்கள் வழங்க வேண்டும்.
குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே சலுகை பொருந்தும். பாண்டிச்சேரி, சண்டிகர் மற்றும் பதான்கோட்டில் இந்த சலுகை செல்லாது. தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களில் டிக்கெட் விலை ரூ. 112 + ஜிஎஸ்டி. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவில் டிக்கெட் விலை ரூ. 100 + ஜிஎஸ்டி.
குறைந்த விலையில் டிக்கெட்டுகள் பாக்ஸ் ஆபிஸ் கவுண்டர்கள் முழுவதும் விற்கப்படும். டிக்கெட்டுகளை பிவிஆர் சினிமாஸ் ஆப் மற்றும் அதன் இணையதளத்திலும் வாங்கலாம்.
வாரிசு, துணிவு, வீர சிம்ம ரெட்டி வரை, வால்டேர் வீரய்யா, குட்டே, தமாகா (இரட்டை தாக்கம்), மேகன் என பல படங்கள் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றைய எல்லாம் இந்த சலுகைகள் மூலம் பார்க்க முடியும்.