ஒடிடியில் சுதந்திரம் இல்லை – வெற்றிமாறன்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழா 2023 நடைபெற்றது. ஜனவரி 6 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவினை தொடங்கி வைத்தார்.
இதில் விழாவின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் பங்கேற்றார்.
அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், ஓடிடி ஓடிடி வருகைக்குப் பின் படைப்பாளர்கள் நினைத்த மாதிரி படம் எடுக்கக்கூடிய சுதந்திரம் இருக்கிறது என நீங்கள் உணர்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வெற்றி மாறன் கூறிய பதில், ” கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிக சுதந்திரம் இருப்பதாக தோன்றியது. ஆனால் நான் இப்போது, தியேட்டர்களில் படம் வெளியிடுவதில் உள்ள சுதந்திரம் எதிலும் இல்லை என்று தோன்றுகிறது.
ஓடிடியில் படத்தை கொடுப்பதால் நாம் செலவு செய்த பணம் திரும்ப கிடைத்துவிடும். அதேசமயம் ஒரு படத்தை தியேட்டரில் வெளியிட்டால் அந்த படம் முதலீடு செய்ததற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பணம் கிடைக்க வழி செய்யும். ஆனால் இன்னும் சில நாட்கள் கழித்து ஓடிடி தளங்கள் நம்மிடம் இப்படித்தான் படம் வேண்டுமென நிபந்தனை விதித்தால், நாம் அதை நோக்கி நகர்வோம். இதனால் நமது படைப்பு சுதந்திரம் பறிக்கப்படும். அந்த மாதிரி நிலை வரக்கூடாது என்று விரும்புகிறேன்