ஜிவி பிரகாஷ் படத்தின் உரிமையை கைப்பற்றிய சக்தி பிலிம்ஸ்

ஜிவி பிரகாஷ் படத்தின் உரிமையை கைப்பற்றிய சக்தி பிலிம்ஸ்

ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி G. டில்லி பாபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கள்வன்’ பட வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம்ஸ் வாங்கி இருக்கிறது. ஜிவி பிரகாஷ், பாரதிராஜா மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை பிவி சங்கர் இயக்கி இருக்கிறார்.

பாலா இயக்கத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார்கள். PV சங்கர் ‘கள்வன்’ படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் கையாண்டு இருக்கிறார். கூடவே, ரமேஷ் அய்யப்பனுடன் இணைந்து கதை திரைக்கதையும் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து படத்திற்கான வசனத்தையும் எழுதியுள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் தியேட்டர் உரிமையை சக்தி ஃபிலிம்ஸ் கைப்பற்றி இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *