வாரிசு விமர்சனம் கூறிய லோகேஷ் கனகராஜ்

வாரிசு விமர்சனம் கூறிய லோகேஷ் கனகராஜ்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் வெளிவந்துள்ளது. அஜித் – ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தையும் போனி கபூரே தயரித்துள்ளார். வாரிசு திரைப்படத்தை தில்ராஜி தயாரிக்க வம்சி இயக்கி இருந்தார்.

இரண்டு படங்களும் இன்று வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 67 திரைப்படத்தின் இயக்குனரும், மாஸ்டர் படத்தின் இயக்குனருமான லோகேஷ் கனகராஜ், வாரிசு படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

அதில், ” ரொம்ப நாள் கழித்து விஜய் சார்யை இப்படி பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இனி வரும் காலங்களில் விஜய்யின் 67 வது படத்தின் அப்டேட் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *