கலைஞரின் பயோபிக்கை இயக்க போவது இவரா?

கலைஞரின் பயோபிக்கை இயக்க போவது இவரா?

வெற்றிமாறன் தமிழ் இயக்குநர்களில் முக்கியமானவர். அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் தலைசிறந்த படைப்பாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அவர் பெரும்பாலும் தனுஷுடன் பணியாற்றினாலும், மற்ற முன்னணி ஹீரோக்களுடனும் அவர் பணியாற்ற வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் விடுதலை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதைத்தொடர்ந்து, கலைப்புலி.S.தாணு தயாரிப்பில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருக்கிறது.

இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க திமுக-வில் யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக எந்த இயக்குனரை தேர்வுசெய்யலாம் என ஒரு தேடல் பயணம் போய் கொண்டு இருக்கிறது. அந்த நிலையில், வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று உதயநிதி கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *