‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா – தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்

‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா – தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம்

ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு எப்போதும் தனித்து தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருந்தது. அதனால் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு டிக்கெட் ஒன்று 4000 ரூபாய்க்கு விற்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியது. பல விமர்சனங்களையும், சிக்கல்களையும், ஆராவாரத்தையும் தாண்டி விழா நடந்து முடிந்தது.

இந்நிலையில் கோலாகலமாக நடந்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதமானதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அரங்கைத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. சேதம் குறித்த கணக்கெடுப்புக்குப் பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கபடும் என்று நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *