வாடிவாசல் டிராப்பா? துவங்குமா?
வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து தற்போது வந்துள்ள ஒரு செய்தி சூர்யா ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்படும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகின்றன.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் கடந்தாண்டு வாடிவாசல் படம் துவங்குவதாக இருந்தது. அதற்காக கிலிம்ஸ் வீடியோ ஷூட்டிங்கும் நடத்தப்பட்டது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக தாமதமாகிக்கொண்டே செல்வதால் இப்படத்தின் நிலை என்ன என்பதை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது இப்படத்தை கைவிட முடிவு செஞ்சிட்டதா சில தகவல்கள் வருகின்றன. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்திதான் விரைவில் இப்படம் துவங்கும் என்று தயாரிப்பு தரப்பு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.