விதிகளை மீறி கட்டப்படும் நாகார்ஜுனா வீடு!
கோவாவில் விதிகளை மீறி 100 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பங்களா பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நடிகர் நாகார்ஜுனாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்குது, கோவா அரசு.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா, வடக்கு கோவாவில் உள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார். சுமார் 100 கோடி மதிப்பில் இந்த பங்களா கட்டப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக இப்போது புகார் ஒன்று எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் புகார் அளித்து இருக்கிறார்கள்.
இதை விசாரித்த கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புது கட்டிடங்கள் கட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடப் பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.