தள்ளிபோகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்!
இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரிலீஸ் செய்து தள்ளி வைப்பு!
2021-ஆம் வருடம் மலையாளர் இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மலையாளத்தை தாண்டி, அனைத்து மொழி ரசிகர்களும் அந்த படத்தை பார்த்து பாராட்டினர். சமூக சிக்கலையும், பெண் சுதந்திரம் பற்றியும் பேசிய அந்த படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் வாங்கி இருந்தார். தமிழில் இந்த படத்தை அதே பெரில் ஐஸ்வர்யா ராஜேஷ்-யை நாயகியாக வைத்து எடுத்து இருந்தார். மேலும், இந்த் படத்தில் நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இ ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வருகிற டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனாவும் ரிலீஸாவதால், இந்த படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து இருக்கிறார்கள்.