மீண்டு(ம்) வரும் மீனா!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கோலிவுட்டில் ரஜினி, கமல், அர்ஜுன், விஜயகாந்த், அஜித், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியா நடித்தவர் நடிகை மீனா. தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் நடித்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் பல நடிகைகள் சினிமாவை விட்டு முழுமையாக விலகிவிடும் நிலையில், நடிகை மீனா திருமணமான பின்னரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளில் அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இவரைப் போலவே இவருடைய மகள் நைனிக்காகவும் தளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தி வரும் நைனிகா, திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும்.. அவ்போது தன்னுடைய அம்மாவுடன் போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு, பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறார். கணவர், குழந்தை, என மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நடிகை மீனாவின் வாழ்க்கையில் இடி விழுந்தது போல் நேர்ந்தது அவரின் கணவர், வித்யாசாகரின் மரணம். கடந்த சில வருடங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர், அதற்கான சிகிச்சையும் தொடர்ந்து எடுத்து வந்த போதிலும், திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நுரையீரல் பாதிப்பு அதிகரித்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் தன்னுடைய கணவரின் மரணம் குறித்து, மிகவும் உருக்கமான சில பதிவுகளை நடிகை மீனா வெளியிட்டு, கணவர் மரணம் குறித்து வெளியான வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார்.
கணவர் மரணத்தால் சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த மீனா வெளியுலகத்திற்கு வராமல், வீட்டின் உள்ளேயே இருந்த நிலையில், அவருடைய தோழிகளான ரம்பா, கலா மாஸ்டர், பிரீத்தா போன்ற பலர் மீனாவின் மனதை தேற்றி, மீண்டும் வெளியே கொண்டு வந்தனர். மெல்ல மெல்ல கணவரின் இழப்பில் இருந்து மீண்டுள்ள நடிகை மீனா மீண்டும் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை அவர் வெளியிட, அது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நடிகை மீனா விளம்பர படப்பிடிப்பு ஒன்றிற்காக மேக்கப் போடும் காட்சிகள், நடிக்கும் நடிக்கும் காட்சிகள் உள்ளன. இவரின் இந்த BTS வீடியோவை பார்த்து ரசிகர்கள், மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CmeLJzmDser/?hl=en