வாரிசு படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா?

வாரிசு படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா?

வாரிசு படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி நடக்கவிருக்கிறது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு எப்போதும் தனித்து தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக பல வருடங்கள் கழித்து அஜித்துடன் களமிறங்குவதலும், விஜய்தான் நம்பர் 1 என்று தில்ராஜு கூறியிருப்பது சர்ச்சை ஆகியிருப்பதாலும் விஜய் எவ்வாறு பேசப்போகிறார் என்ற ஆவல் பலரிடம் உருவாகி இருக்கிறது.

இச்சூழலில் இந்த வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு டிக்கெட் ஒன்று 4000 ரூபாய்க்கு விற்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆடியோ விழா நடக்கும் போது தான் இது குறித்த முழு விவரங்களும் வெளியாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *