எப்போது ஆரம்பிக்கும் குற்றபரம்பரை!!

எப்போது ஆரம்பிக்கும் குற்றபரம்பரை!!

நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ நாவலை படமாக்குவதற்கான போட்டி வெகுநாட்களாக பெரிய இயக்குனர்கள் மத்ஹ்டியில் இருந்தது. குறிப்பாக இயக்குனர் பாலாவும், பாரதிராஜவும் இந்த படத்தை இயக்க போட்டி போட்டு வந்தனர். ஆனால் இந்த படம் உருவாக்கபடாமலே இருந்தது.

இந்நிலையில்தான் அந்நாவல் மீண்டும் திரையில் உயிர்பெற இருக்கிறது. இந்த நாவலை படமாக்க ஹாட் ஸ்டார் நிறுவனம் முன்வந்து இருக்கிறது. முதலில் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் முத்தையாவிடம் ஹாட்ஸ்டார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

இப்படி இருக்கையில் கோலிவுட்டின் நம்பிக்கை இயக்குனர் சசிகுமார் இந்த பிராஜக்ட்க்குள் வந்து இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க போவது விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகபாண்டியன் என்று கூறப்பட்டது.

அதனால் சண்முக பாண்டியன் நீண்ட தாடி, தலைமுடி என்று படத்திற்கு தயாராகி வந்தார். ஆனால் பல நாட்களாக ‘குற்றப்பரம்பரை’ தொடங்கப்படாமல் இருந்தது. சண்முக பாண்டியன் பல படங்களை இதற்காக தவிர்த்து வந்தார். இந்நிலையில் இந்த படத்தை ஒளிப்பதிவாள் வேல்ராஜ் தயாரிப்பார், மற்றபடி சசிகுமார் இயக்குனராகவும், சண்முக பாண்டியன் கதாநாயகனாவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *