மெகா பட்ஜெட்டில் தளபதி68!
நடிகர் விஜய் உடைய 67 ஆவது படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், படத்தை லலித் தயாரிக்கிறார், லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜூன் போன்றோர் நடிக்கிறார்கள் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்ததே. படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்றாலும், படத்திற்கான முன் ஏற்பாடுகள் போய் கொண்டு இருக்கிறது. தளபதி67 படமே இப்படி போய் கொண்டு இருக்கும் நிலையில், 68 படத்தின் வேலைகள் துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் 68 ஆவது படத்தை அட்லீ இயக்குவார், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் என்ற தகவல் முன்பே வெளியானது. ஆனால் அதில் இப்போது ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதாவது விஜய்யின் 68 ஆவது படத்தை அட்லீ இயக்குகிறார் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. ப்டத்தின் தயாரிப்பாளர் மாறியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் அடுத்த பட தேதிக்காக ஏஜிஎஸ், தேனாண்டாள் பிலிம்ஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் என பலர் காத்து கொண்டு இருக்கும் வேளையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளே நுழைந்து விஜயின் அடுத்தபடத்தை தூக்கிவிட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான் என்ற தகவலும் வந்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் கிட்டதட்ட 400 கோடி என்று கூறப்படுகிறது. படத்தின் படபிடிப்பிற்கே 250 கோடி என்று படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.