தமிழ்சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் லண்டனில் குவிந்துள்ளனர்@
லைகா புரொடக்ஷன் வருடாவருடம் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை ஒட்டி லண்டனில் மிகப்பெரிய விருந்து கொண்டாட்டம் நடத்திவருவது அனைவரும் அறிந்த விஷயம். அதற்காக பல்வேறு நாடுகளில் லைகாவில் பணிபுரிபவர்களை அழைத்துச் சென்று நிர்வாகம் விருந்து கொடுப்பார்கள். திரைப்படத் தயாரிப்பில் அவர்கள் இறங்கியதிலிருந்து தமிழ்த்திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் அவ்விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் இத்தாண்டு லைகாவின் தமிழ்நாடு பொறுப்பாளர் தமிழ்க்குமரன் மற்றும் முன்னணி ஊழியர்கள்,ரெட்ஜெயண்ட் நிறுவனத்திலிருந்து செண்பகமூர்த்தி, ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர. அதோடு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து நரேஷ், மெட்ராஸ் டாக்கீஸ் சிவாஆனந்த் ஆகியோரோடு மணிரத்னம், சுகாசினி, ஐஸ்வர்யா ரஜினி, சுந்தர்.சி, பிரதீப்ரங்கநாதன் ஆகிய பிரபலங்களையும் விருந்துக்கு லைகா அழைத்து இருந்தார்கள்.
இதில் மணிரத்னம் மட்டும் உடல்நல குறைவால் அங்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மற்றபடி தமிழ்சினிமாவின் தற்போதைய முக்கிய நட்சத்திரங்களில் பலர் அந்த விருந்தில் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.