தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரதோடு இணைந்த வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரதோடு இணைந்த வெற்றிமாறன்

தமிழ் இயக்குநர்கள் கூட்டத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் வெற்றிமாறன். அவரோட படங்கள் ஒவ்வொன்றும் தலைசிறந்த படைப்பாக அமைந்து, ரசிகர்களை வெகுவாக கவருகிறது. அவர் பெரும்பாலும் தனுஷுடன் பணியாற்றினாலும், மற்ற முன்னணி ஹீரோக்களுடனும் அவர் பணியாற்ற வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் விடுதலை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதைத்தொடர்ந்து, கலைப்புலி.S.தாணு தயாரிப்பில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருக்கிறது. இதுபோக, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படம், விஜயுடன் ஒரு படம், இயக்குனர் அமீருடன் இணைந்து ஒரு வெப் சீரிஸ் என வெற்றிமாறனின் அடுத்தடுத்த படங்களின் பட்டியல் நீள்கிறது.

இந்நிலையில் அவர் உருவாக்கும் அடுத்த வெப் சீரிஸில் பணியாற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவை சேர்த்து வரும் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீ ராம் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இதை ஒளிப்பதிவாளர் PC.ஸ்ரீராம் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இந்த கூட்டணி முதன்முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இந்த தொடரை ஜீ5 தயாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *