சிம்ரன், ஜோதிகாவை குதிரை என கூறிய விஜய்- ஷாம் பேச்சால் சர்ச்சை

சிம்ரன், ஜோதிகாவை குதிரை என கூறிய விஜய்- ஷாம் பேச்சால் சர்ச்சை

வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, ஷாம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வாரிசு படம் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இந்த பொங்கல் தளபதி பொங்கல் என விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஷாம் பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசிய விஷயம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. ஷாம் கூறியதாவது, ” நான் திடீர் என்று கதாநாயகன் ஆனேன். அதன் பிறகு விஜய் அண்ணாவை பார்த்தபோது, வரும்போதே இரண்டு குதிரைகள் ஜோதிகா, சிம்ரன்னு யாருடா நீ என்று என்னிடம் சொன்னார்” என்று ஷாம் குறிப்பிட்டுள்ளார்.

ஷாம் கதாநாயகனாக அறிமுகமான 12 பி படத்தில் சிம்ரன், ஜோதிகா என்று இரண்டு முன்னணி கதாநாயகன்களுடன் நடித்தார். படம் வெளியான போது யார் இந்த பையன் முதல் படத்திலயே ஜோதிகா, சிம்ரனுடன் நடித்துவிட்டாரே என்று அப்பொழுது ரசிகர்கள் வியந்தது உண்டு. அதை குறிப்பிட்டு ஷாம் தற்செயலாக சொன்ன குதிரை விஷயம் இப்போது பூதாகரமாகவிட்டது. இரண்டு முன்னணி நடிகைகளை குதிரை என்று விஜய் கூறியிருக்கிறார். இதை குறிப்பிட்டு சமூகவலைதள வாசிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *