கமல்ஹாசன்- மகேஷ் நாரயணன் படம் டிராப்பா?

கமல்ஹாசன்- மகேஷ் நாரயணன் படம் டிராப்பா?

தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் கமல்ஹாசன் நடித்துவருகிறா. இந்த திரைப்படத்தை லைகாவுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத் உடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்த தகவல் தான். இதற்கு அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமல்ஹாசன் கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.

இதுதவிர பா.இரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரும் கமல்ஹாசனுக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கி உள்ளனர். அடுத்ததாக லோகோஷ் உடன் விக்ரம் 2விலும் கமல் இணைய உள்ளார். இதனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கமல்ஹாசன் தேதிகள் இல்லாத நடிகராக வலம் வர போகிறார் என்பது தான் சினிமா வட்டாரங்கள் கூறும் கருத்து.

இந்த நிலையில், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விக்ரம் படத்துக்கு முன்னரே இந்த கூட்டணி குறித்து தகவல் வெளியானது. இது தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் இப்படத்திற்கு கமல் திரைக்கதை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது, அல்லது தலைவன் இருக்கிறான் படத்தை தான் எடுக்க போகிறார்கள் என்றும் கூறப்பட்டது.

Kamal Haasan's film with Mahesh Narayanan is NOT shelved, confirms director  | Exclusive - India Today

குறிப்பாக இந்த படத்துக்காக இயக்குனர் மகேஷ் நாராயணன் 2 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், தற்போது அப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மகேஷ் நாராயணன், கமல்ஹாசனி விஸ்வரூபம் படத்திற்கு படதொகுப்பாளாராக பணியாற்றி இருந்தார். அப்பொழுது இருந்தே நெருங்கி இருந்த இந்த கூட்டணி, புதிதாக படம் ஆரம்பிப்பது கிட்டதட்ட உறுதி என்று கூறப்பட்ட செய்தி, இன்று பொய்யாக மாறி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *