வெண்ணிலா கபடி குழு நடிகர் உயிரழந்தார்!!

வெண்ணிலா கபடி குழு நடிகர் உயிரழந்தார்!!

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பிரபல காமெடி ஆன பரோட்டா காமெடியில் ஹரிவைரவன் நடித்துள்ளார். பிரபல பரோட்டா காமெடியில் நடிகர் சூரி கடைக்காரரிடம் சென்று பந்தயத்துக்கு நாங்க வரலாமா என்று கேட்பார். அப்போது கடைக்காரர் இவனைத் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என்று கூறுவார். அந்த இவனைத் தவிர… அந்த நபர் தான் நடிகர் ஹரிவைரவன்.


மதுரையை சேர்ந்த இவர் உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலையில் அதிக அளவு பிரச்சனை இருந்த காரணத்தினால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வந்த, ஹரி வைரவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் ஹரி வைரவன் இன்று அதிகாலை 12.15 மணியளவில் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *