நடிகை மீனாவின் திருமண சர்ச்சை!!

நடிகை மீனாவின் திருமண சர்ச்சை!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போதும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், 46 வயதான மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் தளபதி விஜயின் மகளாக தெறி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரும் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஜூன் 28ஆம் தேதி மீனாவின் கணவர் நுரையீரல் செயலிழப்பால் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாத மீனா இப்போது மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்.

இந்த நேரத்தில்தான் நடிகை மீனாவின் மறுமணம் குறித்து செய்திகள் பரவி வருகின்றன. மீனா விரும்பாவிட்டாலும், மறுமணத்திற்கு சம்மதிக்க பெற்றோர் வற்புறுத்தியதாகவும், குடும்ப நண்பரை திருமணம் செய்து கொள்வதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியை முற்றிலும் மறுத்த மீனா, இது வதந்தி என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *