நெல்லை ராம் திரையரங்கில் ரசிகர்கள் சூழ படம் பார்த்த இயக்குனர் நடிகர் ப்ரதீப் ரங்கநாதன்…

நெல்லை ராம் திரையரங்கில் ரசிகர்கள் சூழ படம் பார்த்த இயக்குனர் நடிகர் ப்ரதீப் ரங்கநாதன்…

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ‘லவ் டுடே’கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டு இருக்கிறது. கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவான இப்படத்தை ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் ரசிகர் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது.

‘லவ் டுடே’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் பணியாற்றியுள்ளனர். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை ததும்பும் பொழுதுபோக்கு படமாக ‘லவ் டுடே’ இருக்கிறது என்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ரசிகர்கள் ரசித்த திரைப்படத்தை ரசிகர்களுடன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் கண்டு ரசித்துள்ளார். படம் முடிந்த பின்னர், இயக்குனர் பிரதீப் ரசிகர்கள் முன் தோன்றி ரசிகர்களின் பேராதவிற்கு நன்றிகள் மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *