விஷால் திருமண சேதி பொய்யா?

விஷால் திருமண சேதி பொய்யா?

நடோடிகள், பூஜை, ஈசன் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை அபிநயாவை, நடிகர் விஷால் காதலிப்பதாகவும், சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் செய்தி ஒன்று பரவி வந்தது.

இந்த நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நாடோடிகள் படம் மூலம் அறிமுகமான அபிநயாவிற்கு காது கேட்காது மற்றும் வாய் பேசவும் முடியாது. இவரும், விஷாலும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற செய்தி தெரிந்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வந்தார்கள்.

இப்போது, இத்தகவல் குறித்து நடிகை அபிநயா விளக்கம் கொடுத்துள்ளார். “மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு மனைவியாக நான் நடித்து இருக்கிறேன். சினிமாவில் கணவன் மனைவியாக நடித்ததால் உண்மையில் அப்படி ஆகிவிட முடியுமா என்னும் கேள்வியையும் அபிநயா எழுப்பி உள்ளார்.

இதனால் விஷாலுக்கும் அபிநயாவுக்கும் இடையான காதல் செய்தி பொய் என நிரூபனமாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *