தளபதி 67- ல் மற்றொரு முன்னனி ஹீரோ

தளபதி 67- ல் மற்றொரு முன்னனி ஹீரோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் திரைப்படமாக எல்லா பகுதிகளிலும் வெற்றி வாகை சூடியது.

இதைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜயின் படத்தை லோகேஷ் இயக்க உள்ளார். தளபதி 67-கான முதல் கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக ஆறு பேர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த படத்தில் லோகேஷ் தனக்கு பிடித்தமான நடிகரான மன்சூர் அலிகானை வில்லனாக நடிக்க வைக்க உள்ளார் என்றும், இயக்குன கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் பிரித்விராஜ் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பல படங்களில் அவர் பிஸியாக உள்ளதால் கால்ஷூட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் அவரால் தளபதி 67 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் பிரேமம் படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நிவின் பாலி, விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளார். தமிழில் நேரம் படத்தில் நடித்த நிவின் பாலி, மலையாள சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருகிறார். தற்போது தளபதி 67 படத்தில் நிவின் பாலியை லோகேஷ் கமிட் செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *