உதயநிதிக்கு நன்றி தெரிவித்த கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது.
மூன்றுக்கும் அதிகமான மொழிகளில் தயாராகி உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் ஆன இந்த ’சர்தார்’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மொழிகளில் பெரும் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளை வாரி குவித்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு சமீபத்தில் சக்ஸ்ஸ் மீட் வைத்து, அதில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டனர்.
இந்நிலையில் “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை நடிகர் திரு.கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் திரு. S.லக்ஷ்மன் குமார் இன்று நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். நிகழ்வின் போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி திரு C.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.