விஜய் பட இயக்குநருக்கு நித்தியானந்தா விருது

விஜய் பட இயக்குநருக்கு நித்தியானந்தா விருது

இயக்குனர் பேரரசு விஜயுடன் இணைந்து திருப்பாச்சி, சிவகாசி என்று இரண்டு வெற்றிபடங்களை கொடுத்து இருக்கிறார். அதோடு அஜித் உடன் இணைந்து திருப்பதி என்ற படத்தையும் கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குனராக வலம் வரும் பேரரசு மீண்டும் விஜயை இயக்க திட்டமிட்டு வருகிறார்.

இதோடு சமீபத்தில் ராஜராஜ சோழன் குறித்து வெளியான சர்ச்சையில் கருத்து தெரித்துவித்து, சமூக வலைதளத்தில் வார்த்தை போர் நிகழ்ந்ததில் இவரும் இடம்பெற்று இருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பேரரசின் ஆன்மிக பணிக்காக கைலாசவிலிருந்து நித்யானந்தா ’கைலாச தர்ம ரட்சகா’ விருதினை வழங்கியுள்ளார். இயக்குநர் பேரரசு, சினிமா மட்டுமல்லாமல் இந்து சமயத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அதனால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பேரரசுக்கு விருது வழங்கி பேசிய நித்தியானந்தா, “உங்கள் பணிகளை நான் நன்கு அறிவேன். உங்களுடைய எல்லா திரைப்படங்களினுடைய தலைப்புகளுமே ஆன்மிகத் தலங்களாகத்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *