இனிதே துவங்கிய டோவினோ தாமஸ் புதுப்படம்

நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” #ARM இனிதே துவங்கியது !!!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் கேரக்டர்களான மணியன், அஜயன், குஞ்சிகேலு மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

பான்-இந்திய திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படம் 3டியில் வெளியாகவுள்ளது. கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகியகள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை UGM Productions தயாரிக்கிறது. Magic Frames நிறுவனம் தயாரிப்பில் இணைந்துள்ளது. இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் களரி எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால், நடிகர் டோவினோ பிரத்யேகமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் – கோகுல் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் – பிரவீன் வர்மா, ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்,
புரடக்சன் கண்ட்ரோலர் – பாதுஷா
எடிட்டிங் – ஷமீர் முகமது,
ஸ்டில்ஸ் – ஜோமோன் T ஜான்
மார்க்கெட்டிங் டிசைன் – பப்பட் மீடியா டிஜிட்டல் மார்க்கெட்டிங் – தனய் சூர்யா & திலீப் லெக்கலா (trendy tolly)
மக்கள் தொடர்பு – சதீஷ் குமார் (AIM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *