நயன் & விக்கியால சர்ச்சையாகும் வாடகைத் தாய்

நயன் & விக்கியால சர்ச்சையாகும் வாடகைத் தாய்

 

நாடு முழுவதும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது தற்போது வணிக ரீதியாக அதிகரித்து விட்டது. இதனை அடிப்படையாக் கொண்டுதான் கடந்த 2021ம் ஆண்டு, ‘வாடகை தாய் நெறிமுறை சட்டம்- 2021’ உருவாக்கப்பட்டது.

வாடகை தாய் விவகாரம் என்பது இந்தியாவில் பல வருடமாக சர்ச்சையில் இருக்கும் விஷயம் ஆகும். இதை பற்றி குறிப்பாக கடந்த 20 வருடங்களாக தீவிர விவாதங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள 15-20 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். அதாவது கருவை உருவாக்க, வாடகை தாய்க்கு செலவு செய்ய, அவருக்கான தனிப்பட்ட கட்டணம், குழந்தை பிறக்கும் போது உள்ள மருத்துவ செலவு, குழந்தை பிறந்த பின் உள்ள மருத்துவ செலவு எல்லாம் சேர்த்து 15-20 லட்சம் வரை ஆகும்.

ஆனாலும் இந்தியாவில் இருக்கும் பெண்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்பும் நிலையில் வாடகை தாய் மார்க்கெட் இந்தியாவில் மிகப்பெரியதாக இருந்தது. வெளிநாட்டு தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் 25 ஆயிரம் குழந்தைகள் கடந்த 2005-2015 வரை இந்தியாவில் பிறந்துள்ளார். அந்த அளவிற்கு வாடகை தாய் முறையில் இந்தியா மிகப்பெரிய மார்க்கெட்டாக இருந்தது. இதையடுத்து 2015ல் வெளிநாட்டினர் இந்தியாவில் வாடகை தாய் முறையில் குழந்தை பெற தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும் இங்கு இரண்டு வகையான வாடகை தாய் முறைகள் மொத்தம் உள்ளன. முதல் முறை Surrogacy in the traditional sense அதாவது பாரம்பரிய வகை. இந்த வகை மூலம் தம்பதியில் ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகை தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார். இதில் வாடகை தாய்தான் குழந்தையில் உயிரியல் தாய். ஆனால் அந்த ஆணின் மனைவி சட்ட ரீதியாக தாயாக கருதப்படுவார். இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது முறை Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத் தாய். இதற்கு தான் இந்தியாவில் இன்னும் தடை விதிக்கப்படவில்லை. இந்த முறையில் ஆணின் விந்தணு, அவரின் மனைவியின் கரு முட்டையுடன் சேர்ந்து கருவாக உருவாக்கப்படும். பின்னர் அந்த கரு வாடகை தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இதுதான் கர்ப்பகால வாடகைத் தாய் முறை. இந்த முறையின் படி, கருவுற முடியாத பெண்கள் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் அனுமதி உள்ளது. கருவுற முடியாத பெண்கள் மட்டும் இதில் குழந்தை பெற்றுக்கொள்ள இப்போதும் இந்தியாவில் அனுமதி உண்டு. இதன் வழியின் முறையிலேயே நயன்தாரா அந்த முறை மூலம் குழந்தை பெற்றுள்ளார். அதுவும் இரட்டை குழந்தையாக அவர் பெற்றுள்ளார்.

ஆனால் தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணமாகி 4 மாதத்திலேயே இப்படி குழந்தை பெற்றுள்ளதால் அதை வைத்து நெட்டிசன்கள் பலர் கடுமையான விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *