” ரிலாக்ஸ் ” திரைப்பட லாஞ்ச்

” ரிலாக்ஸ் ” திரைப்பட லாஞ்ச்

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதை ” ரிலாக்ஸ் ”
இயக்குனர் தம்பி செய்து இப்ராஹிம் @ ஸ்ரீ நாயகனாக நடிக்கிறார்

ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் பத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது

கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணியாற்றிய டேவி சுரேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.

ஹிந்தியில் வெளியான திருட்டுப்பயலே 2 படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் சதீஷ் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.

பல வெற்றிப்பாடல்களுக்கு நடனம் அமைத்த தினேஷ் இந்த படத்திற்கு நான்கு பாடல்களுக்கு பல்வேறு விதமான நடன அமைப்புகளை தரவிருக்கிறார்.

பிரபல கலை இயக்குனர் S.S. மூர்த்தி இந்த படத்தின் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

தயாரிப்பு மேற்பார்வை – வேலுமணி

மக்கள் தொடர்பு – மணவை புவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *