100 கோடியை நெருங்கும் சூர்யா படம்.
சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அவரின் 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கான வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும் வியாபாரம் சுமார் 100 கோடியை நெருங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஷூட்டிங் கூட முடியாத நிலையில் இப்படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடித்திருக்கிறது. சூர்யா தற்போது பாலாவுடன் வணங்கான், ஜெய் பீம் எடுத்த ஞானவேல் உடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் உடன் ஒரு படம் என பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அனைத்து படங்களின் அப்டேட்களும் அடுத்தடுத்து வர உள்ளன.