சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மிரள் டீசர்

சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மிரள் டீசர்

நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் இணைந்து நடிச்சிருக்கும் திரைப்படம் மிரள். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி ஆகியோர் மிரள் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

மரகதநாணயம் & ராட்சசன் உள்ளிட்ட குறிப்பிடப்படும் படங்களை தயாரித்த AXESS FILM FACTORY நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு அவர்கள் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிடும் மிரள் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனர் M.சக்திவேல் இயக்கியுள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன்.R படத்தொகுப்பு செய்துள்ளார்.

மிரட்டலான த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் மிரள் திரைப்படத்திற்கு பிரசாத்.SN இசையமைத்துள்ளார். இந்நிலையில் பரத் – வாணி போஜனின் மிரள் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் இந்த டீசர் ஈர்த்துள்ளது.

டீசர் : https://youtu.be/x3V3PiR7Glk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *