நடிகர் அஜித்தின் 30 ஆண்டுகால திரையுலக பயணத்தை ஒட்டி சுவரொட்டி

நடிகர் அஜித்தின்  30 ஆண்டுகால திரையுலக பயணத்தை ஒட்டி சுவரொட்டி

தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் 30 ஆண்டுகால திரையுலக பயணத்தை ஒட்டி, மதுரையில் அவரது ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி விமர்சையாக அதை கொண்டாடி இருக்கிறார்கள். .

அஜித் தற்போது, ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. போனிகபூர் தயாரிக்கும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் பேங்காங்க் பறந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அஜித்-ன் 30 வருட திரைப்பயணம் டிரெண்ட் ஆகி உள்ளது

அந்த சுவரொட்டியில் குறிப்பிட்டு இருப்பதாவது,” 30 வருட சினிமா பயணம் வெற்றி தல, AK என்றும், அரசியல் கட்சிகளின் கொடிகளின் வண்ணத்தில் 30 நொடி விரல் அசைவிற்காக காத்திருக்கின்றோம் தல, AK ” என்று வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், அந்த சுவரொட்டியில் தலைமைச் செயலகம் படம் மற்றும் அஜித் குமார் படங்களுடன் ‘மனித கடவுள் அஜித் பக்தர்கள்’ என குறிப்பிட்டு மதுரை முழுவதும் ஒட்டி உள்ளனர். இந்த சுவரொட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *