வாரிசு படத்தில் குஷ்பூ இருக்காங்களா? இல்லையா?

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில், சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலும், தற்போது சென்னையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடித்துள்ளதாக தகவல் முன்பு வெளியானது. நடிகை குஷ்பூ, விஜயுடன் இணைந்து எடுத்த போட்டோ ஒன்று வைரல் ஆகியது. அதற்க்கு ஏற்றாற்போல் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் குஷ்பூ நடிகர் விஜய், பிரபு, சரத்குமாருடன் குஷ்பூ இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிக்கவில்லைலை என்றும், படப்பிடிப்பில் விஜய்யை பார்க்க தான் சென்றேன் என்று குஷ்பூ கூறியுள்ளார்.

இன்னும் வாரிசு திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளி வர உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *