குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் லோகேஷ் தற்கொலை
மர்ம தேசம் விடாது கருப்பு தொலைக்காட்சி தொடரில் ராசு எனும் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை
1990ஆம் வருஷம் தொலைக்காட்சியில் மர்ம தேசம், ஜீ பூம்பா போன்ற தொடர்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. இன்றும் அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் வரவேற்பும் இருக்குது. சன் டிவி மற்றும் ராஜ் டிவி சேனல்களில் இந்த தொடர்கள் ஒளிபரப்பாகியது. சமீபத்தில் மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியது. அந்த புகைப்படத்தில் பலரும் பார்த்து ஆச்சரியப்பட்டது குட்டி ராசுவாக நடித்த லோகேஷை பார்த்து தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன லோகேஷ் ராஜேந்திரன் இளைஞனாக வளர்ந்து இருந்தார்.
மர்ம தேசம் தொடரை விடவும் ‘ஜீ பூம்பா’ சீரியல் லோகேஷூக்கு மிகப் பெரிய புகழை கொடுத்தது. நடிப்பை விட்டுட்டு இயக்கம், சினிமா சார்ந்த தொழில் நுட்ப வேலைகளில் லோகேஷ் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை இவர் இயக்கிய சில குறும்படங்கள் இணையத்தில் வெளியாகி பாராட்டுக்களை பெற்றன. கூடிய விரைவில் வெள்ளித்திரையில் படங்களை இயக்கவும் லோகேஷ் முயற்சி செய்து வந்து இருக்கிறார்.
இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வாருகிறார்கள்.