வரலாற்று திரைப்படத்தில் கம்பீரத்துடன் மீண்டும் வரப்போகும் விக்ரம்

வரலாற்று திரைப்படத்தில் கம்பீரத்துடன் மீண்டும் வரப்போகும் விக்ரம்

 

பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க விருகிறார் விக்ரம். இந்த படத்தின் பூஜை சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் அரங்கேறியது. ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்கள் வெளியாகும். இதையடுத்து ஹிந்தியில் இயக்குனர் அலாவுகிக் தேசாய் இயக்கும் சீதா என்ற ராமாயண கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்தில் சீதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தைப் போலவே இந்த படமும் சரித்திர கதையில் உருவாகிறது. இதில் விக்ரம் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்திற்கு ராஜமவுலி யின் பிரமாண்ட படங்களுக்கு கதை வசனம் எழுதிய அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கதை வசனம் எழுதுறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *